ஜனாதிபதி ஜெர்மனி விஜயம்: நான்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜுன் 11, 2025 - 11:30
ஜுன் 11, 2025 - 11:31
ஜனாதிபதி ஜெர்மனி விஜயம்: நான்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜெர்மனி ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 

ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!