இங்கிலாந்து மண்ணில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே சதத்தை விளாசி மிரட்டியுள்ளார்.
இந்த சதத்தின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஏழாவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக கங்குலி, முரளி விஜய், அப்பாஸ் அலி பெய்க் போன்ற ஜாம்பவான்கள் இங்கிலாந்தின் மண்ணில் தங்களுடைய முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் தன்னுடைய அறிமுக டெஸ்டில் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் இதனைச்செய்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்வாலின் 5வது சதம் இதுவாகும்.
இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில், ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலியுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 9 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
அறிமுக ஆட்டத்தில் டக் வுட் ஆன சாய் சுதர்ஷன்... மோசமான சாதனை!
அத்துடன், வெளிநாடுகளில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த 4ஆவது வீரர் எனும் பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
WTC-ல் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்
- ரோஹித் சர்மா - 9 சதங்கள்
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 5 சதங்கள்*
- சுப்மான் கில் - 5 சதங்கள்
- விராட் கோலி - 5 சதங்கள்
வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியல்
- சுனில் கவாஸ்கர் - 15 சதங்கள்
- கே.எல். ராகுல் - 5 சதங்கள்
- வீரேந்திர சேவாக் - 4 சதங்கள்
- வினு மங்கட் - 3 சதங்கள்
- ரவி சாஸ்திரி - 3 சதங்கள்
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 3 சதங்கள்*