அறிமுக ஆட்டத்தில் டக் வுட் ஆன சாய் சுதர்ஷன்... மோசமான சாதனை!

டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர். 

அறிமுக ஆட்டத்தில் டக் வுட் ஆன சாய் சுதர்ஷன்... மோசமான சாதனை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இங்கிலாந்து - இந்தியா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி  ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

8 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த கேஎல் ராகுல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

ஷுப்மன் கில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக விரர் சாய் சுதர்ஷன் டக் அவுட்டானதுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டானது இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்ஷனும் தற்சமயம் இடம்பிடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக டெஸ்ட் அறிமுகத்தில் டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் உள்ளனர். 

  1. ரவிச்சந்திரன் அஸ்வின் - 6 பந்துகள்
  2. ஹனுமா விஹாரி - 6 பந்துகள்
  3. ராகுல் சங்வி - 6 பந்துகள்
  4. சாய் சுதர்ஷன் - 4 பந்துகள்
  5. விஜய் பரத்வாஜ் - 4 பந்துகள்
  6. சாய்ராஜ் பஹுதுலே - 3 பந்துகள்
  7. ஜாம்ஷெட் இரானி - 3 பந்துகள்
  8. விருத்திமான் சாஹா - 3 பந்துகள்
  9. ஹர்பஜன் சிங் - 2 பந்துகள்
  10. பிரவீன் குமார் - 2 பந்துகள்
  11. உமேஷ் யாதவ் – 1 பந்து

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT