இந்த முறை எங்கள் வீட்டில் பால் சாதமோ, புது துணியோ இல்லை

மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகும் போது அந்த அழுத்தத்தை மக்கள் பிரதிநிதிகளும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Apr 15, 2022 - 15:48
Apr 15, 2022 - 15:54
இந்த முறை எங்கள் வீட்டில் பால் சாதமோ, புது துணியோ இல்லை

(News21) மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகும் போது அந்த அழுத்தத்தை மக்கள் பிரதிநிதிகளும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதுவருடத்தை கொண்டாடுகிறார்கள் என்று நினைக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எல்லோருக்கும் அப்படி இல்லை.

எனக்கோ, குழந்தைகளுக்கோ நான் புது ஆடை வாங்கவில்லை. இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் வீட்டில் பால் சாதம் சமைக்கப்படவில்லை.

மனசாட்சி உள்ளவர்கள் அதை செய்ய முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, ​​அந்த அழுத்தத்தை மக்கள் பிரதிநிதியும் அனுபவிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.