Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்த நிதியுதவி ரூ.3,421 மில்லியனை கடந்தது!

இதுவரை உலகின் 40 நாடுகளிலிருந்து இந்த நிதியத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 14, 2025 - 09:49
டிசம்பர் 14, 2025 - 09:50
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்த நிதியுதவி ரூ.3,421 மில்லியனை கடந்தது!

டித்வா புயலுக்குப் பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவி கிடைத்துள்ளதாக இலங்கை நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட பெறுமதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை உலகின் 40 நாடுகளிலிருந்து இந்த நிதியத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயங்களாக பெறப்பட்ட மொத்த நிதி 4.17 மில்லியன் அமெரிக்க டொலராகும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிதியத்திற்கு அதிகளவான பங்களிப்பு அமெரிக்காவிலிருந்து கிடைத்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!