கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கைவிடப்பட்ட வாகனம் மீட்பு 

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று(07) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

Mar 7, 2023 - 11:26
கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கைவிடப்பட்ட வாகனம் மீட்பு 

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று(07) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் வாகனத்தை ஹிங்குருகொட சந்தியில் புதிய பாலத்தின் கீழ் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தை கிராண்பாஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், வாகனத்திலிருந்து டி56 துப்பாக்கியும், 9எம்எம் துப்பாகி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்