ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி நிதி மோசடி

Mar 10, 2023 - 11:06
ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி நிதி மோசடி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் நேற்று அறிவித்துள்ளனர்.

ரோஹிதவின் கிரெடிட் கார்டில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு தனியார் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்