சாரதி அனுமதிப்பத்திர சேவைகளை வழங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

கணினி அமைப்பின் செயலிழப்பை மீட்டெடுக்க தொழில்நுட்பத் துறைகள் செயல்பட்டு வருவதாகத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 30, 2025 - 17:33
சாரதி அனுமதிப்பத்திர சேவைகளை வழங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்துத் துறையின் சாரதி அனுமதிப்பத்திர கணினிஅமைப்பின் செயலிழப்பு காரணமாக, வேரஹெர உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களின் செயல்பாடுகள் நாளை (1) மேற்கொள்ளப்படாது என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கணினி அமைப்பின் செயலிழப்பை மீட்டெடுக்க தொழில்நுட்பத் துறைகள் செயல்பட்டு வருவதாகத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் குருநாகல், களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, கண்டி, காலி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்ட அலுவலகங்களில், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுதல், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கயை புதுப்பித்தல் உள்ளிட்ட இணைய சேவைகளை வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகனப் பதிவு மற்றும் பரிமாற்றம் போன்ற பிரிவுகள் பாதிக்கப்படாததால், அந்த நடவடிக்கைகள் வழக்கம்போல மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!