மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு - நீர் வழங்கல் சபை அறிவிப்பு
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (NWSDB) தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலை பின்பற்றி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக நீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் துறை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றிலிருந்து உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார்.