இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்
இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை மறுதினம் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு வருகை தருவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“டிட்வா” சூறாவளிக்குப் பின்னரான இலங்கையின் மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை அவர் இதன்போது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.