முட்டை விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி; வெளியான நல்ல செய்தி
ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தையில் முட்டையின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நாளாந்த முட்டை உற்பத்தி 15 மில்லியனாக அதிகரித்ததன் காரணமாக முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முட்டையை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.