3,500 பேருக்கு நிரந்தர வதிவிட அழைப்பு: கனடா அரசின் புதிய நடவடிக்கை

கனடா அரசு, மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் நீடித்து வரும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் 3,500 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது. 

3,500 பேருக்கு நிரந்தர வதிவிட அழைப்பு: கனடா அரசின் புதிய நடவடிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடா அரசு, மருத்துவ மற்றும் சமூக சேவை துறைகளில் நீடித்து வரும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் 3,500 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) அழைப்புகளை வழங்கியுள்ளது. 

இந்த அழைப்புகள் நவம்பர் 14, 2025 அன்று Express Entry முறையின் கீழ் வெளியிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சுற்றில் CRS (Comprehensive Ranking System) குறைந்தபட்ச மதிப்பெண் 462 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய Canadian Experience Class சுற்றுகளுடன் ஒப்பிடும்போது இந்த மதிப்பெண் குறைவாக இருப்பதால், வெளிநாடுகளில் உள்ள சுகாதார மற்றும் சமூக சேவைகளில் அனுபவமுள்ள நிபுணர்களுக்கும் பரந்த வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள், அவசர சிகிச்சை, நீண்டகால பராமரிப்பு, மனநல சேவைகள், சமூக ஆதரவு சேவைகள் உள்ளிட்ட துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் துரிதமாக சமாளிக்க, அனுபவமுள்ள நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த PR அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த பிரிவில் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியான முழுநேர பணியாற்றியிருக்க வேண்டும். மேலும், குறைந்தது ஒரு வருட திறமையான வேலை அனுபவம் மற்றும் சுகாதார–சமூக சேவை தொடர்பான 37 தொழில்களில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

அழைப்பு பெற்றவர்கள் 60 நாட்களுக்குள் முழுமையான PR விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அடையாள ஆவணங்கள், காவல் துறையின் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கல்வி மதிப்பீடு மற்றும் வேலை அனுபவ சான்றுகள் உள்ளிட்டவை அவசியமாகும்.

கனடா அரசின் இந்த புதிய நடவடிக்கை, நாட்டின் சுகாதார துறையின் வலிமையை உயர்த்துவதோடு, சர்வதேச அளவில் பணிபுரியும் நிபுணர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT