பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 9 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது.

Mar 23, 2023 - 12:26
பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 9 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது.

இதன்போது, இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 1,000 கிலோமீட்டர் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வால் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கி 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லாகூரில் சில நொடிகள் பூமி குலுங்கியதால் நில அதிர்வை உணர்ந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.