அதிதீவிர வானிலை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு; மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையால் 12,313 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.