‘டிட்வா’ புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் 56 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காணாமல் போயுள்ளனர்
‘டிட்வா’ புயல் உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர்,
‘டிட்வா’ புயல் உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், புயலால் நான்கு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன, அதே நேரத்தில் பல மாவட்டங்களில் 666 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.