பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட சிறுவர் நிலையங்களுக்கு நாளை முதல் காலவரையறையற்ற விடுமுறை
பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் பாதகமான வானிலை மற்றும் பேரிடர் சூழ்நிலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.