கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு – குடியுரிமை சட்ட மாற்றம் பலருக்கு நன்மை
வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் அல்லது வெளிநாடுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும்.
கனடா தனது குடியுரிமை சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில் Bill C-3 எனப்படும் புதிய சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை தொடர்பான நீண்டகால பிரச்சினைகளில் இருந்து விடுபடக்கூடும் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியேற்ற மற்றும் குடியுரிமை அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் தெரிவித்ததன்படி, இந்த சட்டமூலம் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியுரிமை இடர்பாடுகளைத் தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் அல்லது வெளிநாடுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த சட்டங்களால் குடியுரிமை இழந்தவர்களுக்கு மீண்டும் கனடா குடியுரிமையை பெறும் வாய்ப்பும் இந்த சட்டமூலத்தின் மூலம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சகத்தினர் தெரிவித்துள்ளனர்.