யாழில் பிட்டு புரைக்கேறி இளைஞன் உயிரிழப்பு 

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

நவம்பர் 17, 2023 - 22:18
யாழில் பிட்டு புரைக்கேறி இளைஞன் உயிரிழப்பு 

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞன் பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் நேற்று முன்தினம் (15 ) உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது, அது புரைக்கேறி உள்ள நிலையில், தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது, வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். 

எனினும், சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து, இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனையில், சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து, சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!