ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்தது என்ன?

தனது கணவன் மற்றும் மகனுடன் குறித்த பெண் சிங்கராஜ வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போனதாகவும், இதனையடுத்து அவரது கணவரும் மகனும் காட்டில் பல மணி நேரங்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜுன் 14, 2022 - 15:02
ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்தது என்ன?

இறக்குவானை-  சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஏலம் பறிக்கச் சென்று காணாமல் போயுள்ளார்.

49 வயதுடைய எஸ்.மனோ ரஞ்சனி என்ற பெண், கடந்த மூன்றாம் திகதி சூரியகந்த பகுதியினுடாக சிங்கராஜ வனப்பகுதிக்கு ஏலம்  பறிக்கச்  சென்றுள்ளார்.

தனது கணவன் மற்றும் மகனுடன் குறித்த பெண் சிங்கராஜ வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போனதாகவும், இதனையடுத்து அவரது கணவரும் மகனும் காட்டில் பல மணி நேரங்கள் தேடியும் மனோ ரஞ்சனியை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் தந்தையும் மகனும் வீட்டுக்கு வந்து அயலவர்களிடம் தெரிவித்துள்ளதுடன்,  சூரியகந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். ஊர் மக்களும் காட்டுக்குள் சென்று, அந்த பெண்ணைத் தேடிய போதிலும் அதில் எந்த விதமான பயனும் கிடைக்க வில்லை.

இதனையடுத்து, குருவிட்ட இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், பொலிஸார்,  அத்தோட்ட மக்களுடனும் இணைந்து அப்பெண்ணை, மூன்று நாட்களாக தேடும் பணியில்  ஈடுபட்டு வந்த நிலையிலும் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!