கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் கைது
கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, 5 இலட்சம் ரூபாய் வழங்கினால் தாயை விடுவிப்பதாகவும் மிரட்டியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சந்தேக நபர்களுக்கு பணம் வழங்குவது போல், கடத்தப்பட்ட பெண்ணின் மகளை அனுப்பி, சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் வ்வுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.