தாய்மாமனால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. 10 பேர் கூட்டு பலாத்காரம்!

விழுப்புரம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து தாய்மாமன் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 1, 2022 - 00:40
தாய்மாமனால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. 10 பேர் கூட்டு பலாத்காரம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 15 வயதுடைய மகள், செஞ்சி அருகேயுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இம்மாணவி கடந்த சில நாட்களாக மனதளவிலும், உடலளவிலும் சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து, பள்ளி ஆசிரியை , அந்த மாணவியை அழைத்து விசாரித்துள்ளார்.

அந்த விசாரனையில், தனது தாய்மாமன் சசி என்பவர் தன்னிடம் பல நாட்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து, தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து, கூட்டாக அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடனடியாக இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், மாணவி சொன்ன விவரங்களை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தாய்மாமன் சசி, கூட்டாளிகள் மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!