சந்திரிக்கா தொடர்பாக மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க கூறியுள்ளார்.

டிசம்பர் 5, 2022 - 17:54
சந்திரிக்கா தொடர்பாக மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு

 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கட்சி அடிப்படை உறுப்புரிமையை இரத்துச் செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க கூறியுள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் மட்டுமல்லாது அந்த கட்சியின் ஆலோசகர் என்பதால், அவரது கட்சி அங்கத்துவத்தை இரத்துச் செய்யவோ அல்லது வேறு நடவடிக்கைகளை எடுக்கவோ போவதில்லை என மைத்திரிபால சிறிசேன உறுதியாக கூறியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர்களால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று முன்தினம் அத்தனகல்லவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!