காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!
பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (08) காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்த நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது..
வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 95 ஐ விட குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 80 ஆகவும், குருநாகலில் 71 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 51 ஆகவும், வவுனியாவில் 63 ஆகவும், கண்டியில் 94 ஆகவும், கேகாலையில் 83 ஆகவும், காலியில் 43 ஆகவும், இரத்தினபுரியில் 71 ஆகவும், களுத்துறையில் 71 ஆகவும் மற்றும் ஹம்பாந்தோட்டையில் 83 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.