தொடர்ந்து 3ஆவது முறையாக சீன அதிபராக ஷி ஜின்பிங் தேர்வு!

ஷி ஜின்பிங் (வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Mar 10, 2023 - 11:17
தொடர்ந்து 3ஆவது முறையாக சீன அதிபராக ஷி ஜின்பிங் தேர்வு!

ஷி ஜின்பிங் (வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14-வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்ய ஆதரவளித்துள்ளனர். 

ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையில் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். மீண்டும் 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிக முறை ஆட்சி செய்த பெருமையையும் பெறுகிறார்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...