சொந்த வீடுவாங்க வேண்டுமா... இவரை வழிபடுங்கள்!

கடன்களில் சிக்கித் தவிப்பவர்களும் அதிலிருந்து மீண்டு வந்து சொந்த மனை வாங்க கூடிய அளவிற்கு யோகம் பெற அங்காரகனை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.

Jan 5, 2023 - 16:13
சொந்த வீடுவாங்க வேண்டுமா... இவரை வழிபடுங்கள்!

சொந்த வீடு, மனை ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் ஆவார். இவருடைய அருள் இருந்தால் தான் நமக்கென சொந்த வீடு அல்லது மனை அமையும் என கூறப்படுகின்றது.

கடன்களில் சிக்கித் தவிப்பவர்களும் அதிலிருந்து மீண்டு வந்து சொந்த மனை வாங்க கூடிய அளவிற்கு யோகம் பெற அங்காரகனை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.

வாழ்க்கையில் மாற்றம் பெறவும் ஏற்றம் அடையவும் செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனுடன் சேர்த்து முருகனை வழிபட வேண்டும்.

அந்த நாளில் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்டு வந்தால், சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் தடைகள் அகலும். அங்காரகனுக்கு உகந்த தானியம் துவரை என்று கூறப்படுகிறது.

எவ்வாறு வழிபட வேண்டும்

செவ்வாய்க்கிழமையில் அங்காரகனை மனதார நினைத்து வீட்டில் இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்து துவரம் பருப்பு பொடி கலந்த தாளித்த சாதத்தை நைய்வேத்தியம் படைத்து சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் அல்லது சீக்கிரம் மனை வாங்க வேண்டும் என்று மனதார மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வேண்டுதலை செவ்வாய் கிழமையில் வரக்கூடிய சூரிய, குரு ஹோரையில் செய்வது மிகவும் விசேஷமானது.

நவகிரக சன்னிதியில் அமைந்திருக்க கூடிய அங்காரகனை வழிபடுபவர்கள் சூரிய குரு ஹோரையில் அதாவது செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் 8 மணி வரையாலான காலகட்டமும் 2 மணி முதல் 3 மணி வரை காலகட்டமும் இந்த சேர்க்கை இருக்கும்.

பிரசாதம்

இந்த நேரத்தில் முடிந்தால் நெய் விளக்கு ஏற்றி தீபம் ஏற்றுங்கள். சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். அவருக்கு உகந்த செவ்வரளி மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். துவரம் பருப்பு பொடி சாதம் அல்லது துவரம் பருப்பு சேர்த்த சாம்பார் சாதம் அல்லது எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களையும் நைவேத்தியம் படைத்து அதை பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

தானம்

வீட்டில் படைத்த நைவேத்தியத்தை வைத்துக் கொள்ளலாம். பின்னர் மனதார வேண்டிக் கொண்டு இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் வெளியில் சென்று தானம் கொடுத்து வரலாம்.

மூன்றிலிருந்து ஐந்து பொட்டலங்கள் தானம் செய்தால் கூட போதும் அங்காரகனின் அருள் முழுமையாக கிடைக்கும்.

தோஷங்கள்

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் செவ்வாய் பகவானையும், முருகனையும் வேண்டி வழிபட்டு அன்னதானம் செய்து வர ஜாதக ரீதியாக சொந்த வீடு அமையக்கூடிய வாய்ப்பு இல்லை என்றால் கூட அந்த தோஷங்கள் விலக ஆரம்பிக்கும்.

இதனால் மனை வாங்க கூடிய யோகம் வரும். மனை ஏற்கனவே வைத்திருந்தால் அதில் வீடு கட்டி குடியேறும் பாக்கியம் அமையும் என்பது ஜோதிட கருத்தாகும்.  

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்