விமானத்தில் தீப்பிடித்த பவர் பேங்க்..! பயணிகள் பீதி
தைவானிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாரான விமானத்தில் போன் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

தைவானிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாரான விமானத்தில் போன் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். மேலும் தீப்பிடித்ததில் கேபின் முழுவதும் புகை நிரம்பியதால் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர்.
விமானப் பணிப்பெண்கள் அச்சமடைந்த பயணிகளை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர்.
இதனையடுத்து விமானத்தில் இருந்த 189 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றபட்டனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சை முடிந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட பின்பு முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விமானம் மீண்டும் புறப்பட தயாரானது.