தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.
இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிடுவதுடன், அதில் வெற்றிபெற்று 2030 வரை ஜனாதிபதியாக செயற்படுவார் என பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.