தேர்தல் தொடர்பான வர்த்தமானி​ வெளியானது

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 1, 2023 - 15:27
தேர்தல் தொடர்பான வர்த்தமானி​ வெளியானது

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38 /1/ A சரத்திற்கு அமைவாக வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!