2026 இல் இந்த ராசிகளுக்கு எல்லாம் கட்டாயம் இது நடக்குமாம்! பாபா வாங்காவின் அதிரடி கணிப்பு
பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார்.
பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார். அவரது கணிப்புகளின்படி, சிம்மம், விருச்சிகம், கன்னி மற்றும் மகரம் ஆகிய நான்கு ராசிகள் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன.
சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு ஒரு பெரிய விடுதலையாக அமையும். நீண்ட காலமாக சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து வந்த சிம்மர்களுக்கு, இந்த ஆண்டு அந்த அழுத்தம் குறையும். இதனால் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, பொருளாதார ரீதியாக நல்ல மாற்றத்தை அனுபவிப்பார்கள்
விருச்சிக ராசியினர் வேலை வாழ்க்கையில் பெரும் உயர்வை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கேட்காமலே கிடைக்கக்கூடிய யோகம் உள்ளது. தொழிலதிபர்களுக்கும் லாபம் மற்றும் வளர்ச்சி உறுதியாக உள்ளது.
கன்னி ராசியினருக்கு புதிய வாழ்க்கைப் பாதைகள் திறக்கப் போகின்றன. திருமணத்திற்கான சாதகமான யோகங்கள் உருவாகியுள்ளன. மேலும், தொழில் ரீதியாக வெளிநாடுகளில் வேலை அல்லது வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
மகர ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக இருக்கும். தொழில் மற்றும் வேலை இரண்டிலும் நல்ல லாபமும், முன்னேற்றமும் கிடைக்கும். நிறைய வருமானம் மற்றும் சமூக ஏற்றம் காரணமாக இந்த ஆண்டு மன மகிழ்ச்சியை அளிக்கும்.
குறிப்பு: பாபா வங்காவின் கணிப்புகள் பெரும்பாலும் மர்மமயமாகவும், பின்னாட்களில் விளக்கப்பட்டவையாகவும் உள்ளன. எனவே, இவை எச்சரிக்கைகள் அல்லது கற்பனைகளாக மட்டுமே கருதப்பட வேண்டும்; உறுதியான எதிர்கால நிகழ்வுகளாக அல்ல.