தெற்கு அதிவேக வீதியில் விபத்து: வெளிநாட்டவர்கள் பயணித்த வேன் மோதி ஐவர் காயம்
சுமார் 04 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது லொறியின் ஒரு பகுதி உடைந்து அதிவேக வீதியின் வெளியே வீசப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் 168 கிலோமீட்டர் மைல்கல் அருகிலான பகுதியில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில், வேனில் பயணித்த இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (15) மாலை சுமார் 04 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது லொறியின் ஒரு பகுதி உடைந்து அதிவேக வீதியின் வெளியே வீசப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள், அதிவேக வீதியில் பணியில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு உட்பட்ட ஆம்பபூலன்ஸ் மூலம் தங்காலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.