அமெரிக்காவில் திருமதி உலக அழகிப் போட்டி - இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த சபீனா யூசுப் புறப்பட்டார்

உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டி, நாளை 22 முதல் எதிர்வரும் 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் திருமதி உலக அழகிப் போட்டி - இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த சபீனா யூசுப் புறப்பட்டார்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவில் நடைபெறும் 41ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சபீனா யூசுப், இன்று புதன்கிழமை ( 21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டி, நாளை 22 முதல் எதிர்வரும் 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சபீனா யூசுப்பை விமான நிலையத்தில் வரவேற்று வாழ்த்துவதற்காக, நிகழ்ச்சியின் தேசியப் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, தேசியப் பயிற்றுவிப்பாளர் ருக்மால் சேனாநாயக்க, மொழி மற்றும் ஆளுமைப் பயிற்றுவிப்பாளர் தாரக குருகந்த ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

மேலும், கடந்த ஆண்டு திருமதி உலக அழகிப் போட்டியில் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமந்தா மற்றும் சபீனா யூசுப்பின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT