உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை

இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 2, 2023 - 15:46
உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை

இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறப்பரின் தரத்தை உயர்த்தி சில பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் அதிக விலைக்கு இறப்பரை இறக்குமதி செய்து வருவதாக இங்கு தகவல் வெளியாகியுள்ளதே இதற்குக் காரணம்.

குறித்த குழு நிதி அமைச்சில் கூடி நீண்ட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அதிகளவிலான இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்தமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளை உரிய நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 2022 இல், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இறப்பர் இறக்குமதி 93% குறைந்துள்ளது மற்றும் இறப்பர் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதியும் 39% அதிகரித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் குழு ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அவ்வப்போது ஏற்பட்ட நிலைமைகளுக்கு தீர்வுகளைப் பிரயோகித்து உள்ளூர் இறப்பர் உற்பத்தியாளரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!