15 வயது பிரித்தானிய சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: ஆப்கான் இளைஞர் இருவருக்கு சிறை
சிறுமி தனது நண்பர்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள பூங்காவில் குகை போன்ற ஒரு இடத்தில் தரையில் தள்ளப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
பிரித்தானியாவின் லீமிங்டன் ஸ்பா (Leamington Spa) நகரில், 15 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, 17 வயது ஆப்கானிய இளைஞர் இருவருக்கு நீதிமன்றம் கடுமையான சிறைத் தண்டனை விதித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது வெளியான தகவல்களின்படி, சிறுமி தனது நண்பர்களிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள பூங்காவில் குகை போன்ற ஒரு இடத்தில் தரையில் தள்ளப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இரு குற்றவாளிகளும் தங்கள் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகளில் ஒருவரான ஜான் ஜஹான்செப் (Jan Jahanceb) என்பவருக்கு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் (Young Offender Institution) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது குற்றவாளியான இஸ்ரார் நியாஸல் (Israr Niazal) என்பவருக்கு 9 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருவரும் தங்கள் சிறைத் தண்டனையை முடித்த பிறகு, பிரித்தானிய அதிகாரிகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.