வவுனியா வரை ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு
ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலான விசேட அவதானிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு ரயில் மார்க்கத்தின் அபிவிருத்தி அடுத்த ஐந்து மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலான விசேட அவதானிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வடக்கு ரயில்வேயின் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான பகுதியின் அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வருடம் முன்னெடுக்கப்படும் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டமாக இந்த ரயில் அபிவிருத்தித் திட்டம் அமைந்துள்ளது.
இந்தியாவில் IRCON நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் 123 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளன.