சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை ஆரம்பம்
காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காலிமுகத்திடலை மையமாகக் கொண்ட 20 வீதிகள் நாளை முதல் 4ஆம் திகதி வரை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது