அகதிகளின் 'நிரந்தர' கனவு முடிந்தது: பிரித்தானியா அதிரடி அறிவிப்பு
பிரித்தானியாவில் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்று விட்டதை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் அகதிளுக்கு நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்று விட்டதை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் அமைச்சர் ஒப்புகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இனிமேல் அகதி தஞ்சம் அங்கீகரிக்கப்பட்ட ஒருவருக்கும் அவரது சொந்த நாடு பாதுகாப்பானது எனக்கருதப்படும் போது, அவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனடிப்படையில், அகதிகளுக்கான தஞ்சங்களை இனிமேல் தற்காலிகமாகவே வழங்க முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், இதனால் இனி மேல் அகதிகள் நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை ஆகிய நிலைகளை எட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.