எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்றைய வானிலை: நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்-உஷா தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 14). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முதலாக அங்கு பயின்று விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரலாறு படைத்தார்.