வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகஸ்ட் 29, 2023 - 21:32
வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு  திட்டத்தில் முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாளை (30) பௌர்ணமி தினம் என்ற  போதிலும் நிவாரணப் பயனாளிகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!