சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்... வெளியான அறிவிப்பு

இறக்குமதி தடைக்காலத்தில் சட்டவிரோதமான முறையில் 5000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

செப்டெம்பர் 1, 2023 - 09:13
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்... வெளியான அறிவிப்பு

இறக்குமதி தடைக்காலத்தில் சட்டவிரோதமான முறையில் 5000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர், இறக்குமதியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாறான வாகனங்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

தடைக்காலத்தில் இவ்வாறான வாகனங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் தமக்கு எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதிலிருந்து சுமார் 6,900 வாகனங்களை அரசாங்கம் விசேட நோக்கங்களுக்காக இறக்குமதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் இலங்கை பொலிஸாருக்காக கொள்வனவு செய்யப்பட்டதுடன், தூதரக நோக்கங்களுக்காகவும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

சட்டத்துக்குப் புறம்பாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வழமையான நடைமுறைகளின் படி பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!