பாரியளவில் அதிகரித்த தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாரியளவில் அதிகரித்த தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் நேற்று திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று முன்தினம் (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  6,29,432 ரூபாயாக பதிவாகியிருந்தது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தநிலையில், நேற்று (01) தங்க நிலவரத்தின்படி, தங்கம் அவுன்ஸ் விலை - ரூ. 6,21,995 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும்,  24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,75,550 ரூபாயாக பதிவாகிய அதேவேளை, 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,61,000 ரூபாயாக பதிவாகியது.

அதசமயம் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண் ) தங்கத்தின் விலை – ரூபாய் 1,53,650 ஆக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று முன்தினம் (31) 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,77,650 ரூபாவாக பதிவாகியதுடன், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,62,900 ரூபாயாக பதிவாகியிருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரியளவில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT