தேசியசெய்தி

நிலநடுக்கங்களே திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைக்கு வர காரணம்

கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைதியின்மை... 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முதல் மின்வெட்டு இல்லை?

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (16) அறிவிக்கப்படும் என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரிய மொழித் திறன் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

03 உறுப்பினர்களுக்கும் எதிராக தலைவர் குற்றச்சாட்டு

மின்சாரக் கட்டணத்தை 36 வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த யோசனையை ஆணைக்குழுவின் மூவரும் நிராகரித்திருந்தனர்.

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இன்று முதல் 66% இனால் மின் கட்டணம் அதிகரிப்பு

தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பிளாஸ்டிக் தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்துள்ளார்.

இந்தியாவில் 200 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கு இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 முதல் 24 வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். 

பாகிஸ்தான் அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

வெல்லவாய பகுதியில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

“தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.