போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் முல்லைத்தீவில் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (27) மாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (27) மாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வீட்டில் இருந்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், 17 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 7 சிறிய பொதிகளில் இருந்த 90மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.