விஜயின் 'சச்சின்' திரைப்படம் ரீரிலீஸ் - போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு

கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

பெப்ரவரி 11, 2025 - 16:06
விஜயின் 'சச்சின்' திரைப்படம் ரீரிலீஸ் - போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு

கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிக அழகான கெமிஸ்டிரி இப்படத்தில் இருக்கும்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

இந்தநிலையில் ஏப்ரல் மாதம் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கோடையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!