சடுதியாக உயர்த்தப்பட்ட அரிசி விலை
சம்பா அரிசியின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சம்பா அரிசியின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உள்ள பிரதான அரிசி நிறுவனம் ஒன்று சம்பா அரிசியின் விலையை கிலோகிராம் ஒன்றுக்கு 230 ரூபாவிலிருந்து 260 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
மற்றுமொரு நிறுவனம் சம்பா அரிசியின் விலையை 245 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 300 ரூபாயை நெருங்கும் என நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.