வட்ஸ் அப் பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வட்ஸ் அப் (whatsApp)நிறுவனம் தமது மேம்படுத்தல்களை அடிக்கடி தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல்கள் பயனாளர்களுக்கு உதவியாகவும், அதேவேளை கையாள்கைக்கு இலகுவானதாகவும் இருக்கும்.

ஜுலை 4, 2023 - 13:28
வட்ஸ் அப் பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வட்ஸ் அப் (whatsApp)நிறுவனம் தமது மேம்படுத்தல்களை அடிக்கடி தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல்கள் பயனாளர்களுக்கு உதவியாகவும், அதேவேளை கையாள்கைக்கு இலகுவானதாகவும் இருக்கும்.

வட்ஸ் அப் (whatsApp) நிறுவனம் இப்போது தனது புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.

இந்த செயலியின் பயன்பாட்டின் பொது பயனர்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சனையாக காணொளிகளை (Videos) முழுமையாக பகிர முடியாமையும், பகிரப்படும் காணொளிகள் (Videos) தரத்தில் குறைவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்பிரச்சனையை உணர்ந்த வட்ஸ் அப் (whatsApp) நிறுவனம் தனது காணொளி அம்சங்களில் மேம்பாடுகளை செய்து தற்போது உயர்தர காணொளி அம்சத்தை (high-quality video feature) தன்னோடு இணைத்துள்ளது. அதன்படி, பயனர்கள் தங்கள் தொடர்புகள் (Contacts) முழுவதும் உயர்தர வீடியோவை அனுப்ப உதவும் புதிய அம்சத்தை வட்ஸ் அப் தளத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த புதிய அம்சம் குறித்து வட்ஸ் அப் (whatsApp) நிறுவனம், வட்ஸ் அப் (whatsApp) தொகுப்பு (Editor) முறைமைக்குள் ஒரு புதிய பொத்தான் குறித்த செயலியில் வெளியிடப்படும், வெளியிடப்பட்ட பொத்தானை பயன்படுத்தி பயனர்கள் உயர்தர வீடியோ பகிர்வைத் தேர்வு செய்யலாம் என கூறுகின்றது.

இந்த ‘தரநிலைத் தரத்தில் அமைக்கப்படும் பெரிய அளவிலான வீடியோக்களைப் பகிரும்போது உயர்தர வீடியோ விருப்பம் தோன்றும், அதேவேளை அரட்டையிலும் (Chats), அது உயர்தர வீடியோவாகக் குறிக்கப்படும்.

ஆனால் WhatsApp Status காணொளிகளை பகிரும் போது இந்த அம்சம் கிடைக்காது. இந்த அம்சமானது தற்போது வட்ஸ் அப் பீட்டா பயன்பாட்டில் கிடைக்கின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!