விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா ஸ்டைலில் மற்றொரு நாடும் அறிவிப்பு.. காரணம் என்ன!

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் விசா பெறுவதிலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.

நவம்பர் 20, 2025 - 21:57
விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா ஸ்டைலில் மற்றொரு நாடும் அறிவிப்பு.. காரணம் என்ன!

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியர்கள் விசா பெறுவதிலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இதேபோல், இப்போது மத்திய கிழக்கில் உள்ள ஈரான் நாடும் இந்தியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதுவரை இந்தியர்கள் ஈரான் செல்ல விசா அவசியம் இல்லை. விசா இல்லாத பயண வசதியால் பலர் எளிதில் ஈரான் சென்று வந்தனர். ஆனால், இந்த விசா விலக்கு நடைமுறையை ஈரான் அரசு நவம்பர் 22-ம் தேதி முதல் முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன்படி, இனி இந்தியர்கள் ஈரானுக்குள் நுழையவோ, இணைப்பு (Transit) பயணமாக ஈரான் விமான நிலையத்தை பயன்படுத்தவோ கூட விசா கட்டாயம் தேவைப்படும்.

ஈரானின் இந்த முடிவைத் தொடர்ந்து, இந்திய வெளிநாட்டுறவு அமைச்சகமும் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், “விசா விலக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. போலியான வாக்குறுதிகள் மூலம் சில ஏஜென்டுகள் இந்தியர்களை ஈரானுக்கு அழைத்துச் சென்று, அங்குச் சிக்க வைக்கிறார்கள்; பணத்திற்காக கடத்தப்படுவதும் நடக்கிறது. எனவே, எந்தவொரு விசா இல்லா பயணத்திலும் ஈடுபட வேண்டாம்; ஏஜென்டுகளை நம்ப வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி:

  • ஈரானுக்குச் செல்லும் அனைத்து இந்தியர்களும் விசா பெற வேண்டும்.
  • ஈரானை ‘ட்ரான்சிட்’ வழியாக பயன்படுத்துபவர்களுக்கும் விசா கட்டாயம்.
  • விமான நிறுவனங்கள் பயணிகள் உரிய விசா பெற்றுள்ளார்களா என்று விமானத்தில் ஏற்றுவதற்கு முன் சரிபார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகால நெருக்கமான உறவு நிலவிக் கொண்டிருந்தாலும், விசா விலக்கு முறையின் தவறான பயன்பாடு அதிகரித்ததாலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இருநாடுகளின் உறவை பாதிக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!