இந்த வார ராசி பலன் : ஆகஸ்ட் 18, 2023 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை
இந்த வார ராசி பலன் : சந்திரன் இந்த வாரம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மகரம் கும்பம் மீனம் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

இந்த வார ராசி பலன்
சந்திரன் இந்த வாரம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மகரம் கும்பம் மீனம் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்
சூரியன் - சிம்ம ராசி
செவ்வாய் - சிம்ம-கன்னி ராசி
புதன் - சிம்ம ராசி
குரு - மேஷ ராசி
சுக்கிரன் - கடக ராசி
சனி -கும்ப ராசி
ராகு - மேஷ ராசி
கேது - துலாம் ராசி
கடவுள் உங்க கனவுல வந்தாரா.. அப்போ ஜாக்பாட் உறுதி!
மேஷம்
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அடைத்த மடையில் வரும் கசிவு நீர் போல பண வரவு கண்டிப்பாக இருக்கும். செவ்வாய் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார். லாட்டரி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். புதன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். என்னடா தொழிலுக்கு எதிர்ப்புகள் வருகிறதே என்று கவலைப்பட்ட உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குருபகவான் 1ஆம் இடத்தில் இருக்கிறார்.
கடுமையான முயற்சி செய்து தொழிலை கவனிக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் நிம்மதி கெடும். சுக்ரன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடவுள் பக்தியும் அதிகரிக்கும். சனி பகவான் 11 ஆம் இடத்தில் இருக்கிறார்.
விற்க வேண்டும் என்ற நினைத்த சொத்துவிற்பனை தள்ளிக் கொண்டே போகும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாம். அகலக் கால் வைப்பது ஆபத்து. ராகு ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். வெளியூர் பயணங்களில் வீண் அலைச்சல் மட்டுமே மிஞ்சும். காரியத்தடைகள் மன நிம்மதியை கெடுக்கும். கேது ஏழாம் இடத்தில் இருக்கிறார். நெருங்கிய உறவினர்களே உங்களுக்கு எதிராக நடப்பார்கள். 23,24 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.
ரிஷபம்
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். கடந்த வார கவலைகள் நீங்கி சந்தோசத்தில் திளைக்க போகிறீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகும். சந்திரனின் நகர்வுகள் அவ்வளவு சாதகமாக இல்லை. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள்.
செவ்வாய் 4- 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்திற்கு அதிக முதலீடு போட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். புதன் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பார்ப்பீர்கள். பெரியோர்கள் சந்திப்பு நன்மைக்கு வழிவகுக்கும்.
குரு பகவான் 12ஆம் வீட்டில் இருக்கிறார். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் வீழ்ந்து போவார்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுக்கிரன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். கூட்டுத் தொழில் அதிக லாபத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய நிலையை எட்டுவீர்கள்.
சனி பகவான் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். வருகின்ற வாய்ப்பை தவற விடாதீர்கள். ராகு 12ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி மக்களால் வீண் தொல்லை உண்டாகும். கேது ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மேலதிகாரிகளின் ஆதரவால் வேலையில் சாதனை புரிவீர்கள்.
மிதுனம்
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் அயராத முயற்சியால் வெற்றி காண்பீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். சந்திரனின் சஞ்சாரம் ஏற்ற இறக்கமான பலன்களை தரும். செவ்வாய் 3, 4 ஆம் இடத்தில் இருக்கிறார்.
புதிய நகைகள் வாங்கி கொடுத்து மனைவியை அழகு பார்ப்பீர்கள். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி உதவி செய்வார்கள். புதன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். இக்கட்டான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் சீராக நடக்கும். குரு பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலைக்காக அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சம்பள உயர்வு வேலை மாற்றம் சிலருக்கு மன மகிழ்ச்சியை தரும்.
சனி பகவான் 9 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சனி கொடுத்தால் யார் தடுப்பார். வியாபாரத்தில் மிகச்சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். தடைபட்ட காரியங்கள் சரளமாக நடக்கும். ராகு 11ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் நம்பி முதலீடு செய்யலாம். தொழிலில் புதிய யுத்திகளை புகுத்துவீர்கள். கேது ஐந்தாம் இல்லத்தில் இருக்கிறார். உறவினரிடம் சற்று எட்டியே இருங்கள். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
கடகம்
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். பிள்ளைகளின் கல்வி செலவு அதிகரிக்கும். கொப்பளிக்கும் கோபத்தால் தேவையில்லாத விரோதம் உண்டாகும். வருமானத்தில் குறைவிருக்காது. சந்திரனின் நகர்வுகள் சாதகமாக இருக்கின்றன. வியாபாரிகள் கொழுத்த லாபம் பெறுவார்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள். செவ்வாய் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார்.
மனதை அறுத்துக் கொண்டிருந்த கவலை நீங்கும். பிரயாணங்களில் நல்ல பலன் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதன் 2 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் குவா குவா சத்தம் மகிழ்ச்சியை உண்டாக்கும். மனதை அலைபாய விடாதீர்கள். குரு 10 இடத்தில் இருக்கிறார். மணம் ஆகவில்லையே என்ற மயக்கத்தில் இருந்தவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழிலில் புதிய சாதனை படைப்பீர்கள். சுக்கிரன் 1 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வீடு கட்ட நிலம் வாங்கலாம் அல்லது புதிய வீடே வாங்கலாம். சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். பெண்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருங்கள். பொருள் சேதம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ராகு 10-ஆம் இடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள். கேது நான்காம் இடத்தில் இருக்கிறார். பெற்றோர்களால் மருத்துவச் செலவு ஏற்படலாம். குடும்பத்தை பற்றிய கவலை அதிகரிக்கும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சொந்த ராசியில் இருக்கிறார். வெளியூர் பயணங்களால் அதிக நன்மை கிடைக்கும். வெளிநாட்டு செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சந்திரனின் சஞ்சாரம் வியாபாரத்தை விருத்தி செய்யும். செவ்வாய் 1,2 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி போட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள். புதிய முதலீடுகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார்.
கடன் தொல்லைகள் கவலையை ஏற்படுத்தும். கணவன் மனைவி உறவு இறுக்கமாக இருக்கும். குரு பகவான் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பொறுமையாக நடந்து கொள்வது அவசியம். சுக்கிரன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். துணிந்து காரியத்தில் இறங்குங்கள். வெற்றியை சந்திப்பீர்கள். திருமண காரியங்கள் இல்லத்தில் நடக்கும்.
சனி பகவான் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். திடீர் பணவரவால் திக்கு முக்காடி போவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் வீட்டில் நடக்கும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் கூட்டு சேர்வார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமான லாபத்தை கொடுக்கும். கணினி துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை போக்க உறவினர்களும் நண்பர்களும் முனைப்பு காட்டுவார்கள். கேது மூன்றாம் இடத்தில் இருக்கிறார். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி
சூரியன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 12,1 ஆம் இடத்தில் இருக்கிறார். கவலைகள் மறையும். பண வரவு அதிகரிக்கும். மனைவி மக்களால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். ராகு உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். சிக்கனமாக செலவு செய்யுங்கள்.
வெளியூர் பயணங்களில் பாதுகாப்பான இடத்தில் தங்குங்கள். குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். பெரிய மனிதர்களின் சந்திப்பு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். கடன் தொல்லைகளை களை எடுப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதன் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்கள் வாங்குவீர்கள்.
வாழ்க்கையில் புதிய திருப்பம் உண்டாகும். ஆன்லைன் வர்த்தகங்கள் சிறப்பான லாபத்தை தரும். கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க முயற்சி செய்யுங்கள். சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் உண்டாகும்.
துலாம்
உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். குடும்பத்தில் சுப காரியத்திற்காக செலவுகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி ஓடும். சந்திரனின் நகர்வு எவ்வளவு சிறப்பாக இல்லை. தொழில்துறையில் கவனமாக இருங்கள். செவ்வாய் 11,12 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏதாவது ஒரு வகையில் மன சஞ்சலம் அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. ராகு ஏழாம் இடத்தில் இருக்கிறார். சிக்கனமாக செலவு செய்தால் பண விரயத்தை கட்டுப்படுத்தலாம். வெளியூர் பிரயாணங்களில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களிடம் பேசும்போது கடுமையான வார்த்தைகளை கையாளாதீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சனி பகவான் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில் சுமாராக நடக்கும்.
வியாபாரத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். புதன் 11,12 ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு மனைகள் வாங்குவதற்கான யோகம் உண்டு. ஆன்லைன் வர்த்தகங்கள் சிறப்பான லாபத்தை கொடுக்கும். குடும்பத்தில் புதிய ஜீவன் உருவாகும். கேது ராசியிலே அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் உதவி செய்வார்கள். அரசாங்க வேலை தடையில்லாமல் நடக்கும். சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். பிடிவாதமாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்.
விருச்சிகம்
சூரியன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். புதிய நண்பர்கள் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள். தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். செவ்வாய் 10,11 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூர் பயணங்களில் வயிற்று கோளாறுகள் ஏற்படலாம்.
கணவன் மனைவி உறவு கசப்பாகவே இருக்கும். ராகு ஆறாம் வீட்டில் இருக்கிறார். ஆடல் பாடல் கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். குரு பகவான் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப்போன திருமணம் உடனடியாக நடக்கும். பொருளாதாரம் மேம்படும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சனி பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். கூட இருந்து குழி பறித்தவர்கள் அழிந்து போவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.
ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமான பலனை கொடுக்கும். புதன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். சொத்து விற்பனை தள்ளிப்போகும். பிள்ளைகளால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கேது 12ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலை அக்கறையுடன் நடத்துவீர்கள். நண்பர்களின் உதவி உண்டு. உறவினர்களை அதிகம் நம்ப வேண்டாம். சுக்கிரன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனையால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். எச்சரிக்கையுடன் எந்த காரியம் செய்தாலும் உங்களுக்கு வெற்றி தான். பணத்தட்டுப்பாடு இருந்தாலும் பொருள் வரவு அதிகரிக்கும். பைனான்ஸ் வியாபாரத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். செவ்வாய் 9,10 ஆம் இடத்தில் இருக்கிறார்.
புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராகு ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். லாட்டரி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவு கொஞ்சம் சிக்கலாக இருக்கும். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். மனநிலை சஞ்சலம் அடைந்து சிலருக்கு உடல்நிலை பாதிக்கலாம். பிள்ளைகளின் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். சனி பகவான் 3 ஆம் வீட்டில் இருக்கிறார்.
அரசாங்க வேலைக்காக அலைந்தவருக்கு நல்ல செய்தி வரும். கமிஷன் வியாபாரம் லாபம் கொழிக்கும். எதிர்பாராத பணபவரவு ஏற்படும். புதன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகம் சிறப்பாக நடக்கும். கேது 11ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமான தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். அரசாங்க வேலைகள் அனுகூலமாக நடக்கும். சுக்கிரன் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். வேண்டா வெறுப்பாக செய்த காரியங்கள் கூட வெற்றியில் முடியும்.
மகரம்
சூரியன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். தெய்வ பக்தியில் மனதை ஈடுபடுத்தி செய்யும் காரியத்தில் வெற்றி பெறுங்கள். வெளியூர் பிரயாணங்களை தள்ளிப் போடுவது நல்லது. வீண் வம்புகள் ஏற்படாமல் வாய் பதனமாக இருங்கள். செவ்வாய் 8,9 ஆம் வீட்டில் இருக்கிறார். எந்த பொருளாக இருந்தாலும் பத்திரப்படுத்தி வையுங்கள். வயது குறைந்தவர்களிடம் வார்த்தையாடாதிர்கள். வீண் பிடிவாதம் வேண்டாம்.
ராகு நான்காம் இடத்தில் இருக்கிறார். திடீர் பண வரவு உண்டாகும்.பணம் கையில் தங்குவது கஷ்டம். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். குரு பகவான் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களால் பணச் செலவு ஏற்படும். தொழிலாளர்கள் பிரச்சனையால் உற்பத்தி முடக்கம் உண்டாகும். மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சனி பகவான் 2 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். தனியார் துறை ஊழியர்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
புதன் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் பார்ப்பீர்கள். நீண்ட நாளாக பின் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் காதலை சொல்வீர்கள். தீய எண்ணங்கள் மனதில் தோன்றக்கூடாது. கேது பத்தாம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். சுக்கிரன் 7 வீட்டில் இருக்கிறார். கூட்டு தொழிலில் அதிக நன்மை உண்டாகும். ஐடி ஊழியர்கள் அதிக நன்மை அடைவார்கள்.18,19 ஆம் தேதி சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
கும்பம்
சூரியன் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். விரோதிகள் கூட விரும்பி வந்து உதவி செய்வார். கடல் கடந்து வெளிநாடு செல்வீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். தொழில் எதிர்பாராத வகையில் மேன்மை அடையும். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். செவ்வாய் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க வேலைகளை தள்ளி போடாதீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சில சிக்கல்கள் வரும்.
ராகு மூன்றாம் வீட்டில் இருக்கிறார். சகோதரர் வகையில் செலவு உண்டாகும். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதமாகும். தான தர்மங்களில் மனம் நாட்டம் கொள்ளும். குரு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் சிறப்பாக தொழில் செய்வார்கள். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். சனி சொந்த வீடான கும்பத்தில் இருக்கிறார். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.
ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள். புதன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். பெண்களால் பொருள் வரவு உண்டாகும். வீட்டில் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள். கேது ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். சில்லறை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். சுக்கிரன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். அவசிய தேவைக்காக கடன் வாங்குவீர்கள். வியாபாரத்தை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள்.20,21 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
மீனம்
சூரியன் 6 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெளியில் தொல்லைகளை சந்தித்தாலும் வீட்டில் உள்ளவர்கள் மனதிற்கு ஆறுதலாக இருப்பார்கள். பணத்தட்டுப்பாடு பயமுறுத்தினாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சந்திரனின் சஞ்சாரம் உறுதுணையாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். செவ்வாய் 6,7 ஆம் வீட்டில் இருக்கிறார்.
வீட்டிலும் வெளியிலும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். சூழ்ச்சியால் வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள். ராகு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இல்லாதவர்களுக்கு உதவி செய்வீர்கள். நுணுக்கமாக வியாபாரம் பார்ப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கு உயரும்.
குரு ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். சிலருக்கு வேலை மாறுதல் உண்டாகும். பண விரயம் ஏற்பட்டாலும் தகுந்த வருமானம் கிடைக்கும். சனி 12 வீட்டில் இருக்கிறார் பலசரக்கு வியாபாரிகள் அதிக பலனடைவார்கள். மேலதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வார்கள். புதன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். தீய நண்பர்களை அடையாளம் கண்டு ஒதுங்குங்கள். கேது எட்டாம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்லுங்கள். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். சுக்கிரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். அடுத்தவர்கள் தயவை நாட வேண்டிய அவசியம் இருக்காது. எடுத்த காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். 22,23 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.