புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவருக்கே சொந்தமான கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமீபத்தில் அவர் மேற்கொண்டு வரும் புலம்பெயர்தல் தொடர்பான கடுமைப்பாட்டை திறம்பட விமர்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்தோர் பின்னணி கொண்ட அரசியல்வாதியாக அறியப்படும் ஷபானா மஹ்மூத், தற்போது புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
முன்னதாக புகலிடத் தேவையாளர் உரிமைகளை ஆதரித்தவராக இருந்த அவர், இப்போது அதே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
சட்டப்படி ஏதிலி (asylum) நிலை பெற்றவர்களையே நாடு கடத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் மீது கூடுதல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.