வங்கி கடன் வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பணவீக்கம் அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
மேலும் கருத்து வௌியிட்ட மத்திய வங்கி ஆளுநர், ''சில வங்கிகள் வரவில்லை. நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம். விளக்கமளிக்க அழைத்தோம். அதன்படி, சில காரணங்களை கூறியுள்ளோம். அதோடு, வங்கிக்கடன் பெற்றவர்களின் வட்டி வீதம் குறைய வேண்டும். ஒவ்வொரு கடனுக்கும் தனித்தனியாக வட்டி வீதங்களை அறிந்து கொள்வது வங்கியின் முடிவு, எனவே மத்திய வங்கி தலையிடாது.'' என அவர் கூறியுள்ளார்.