கால்வாயில் தவறி விழுந்து குழந்தை பரிதாபமாக பலி

ஒரு வயதும் எட்டு மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Apr 26, 2022 - 11:07
கால்வாயில் தவறி விழுந்து குழந்தை பரிதாபமாக பலி

தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் இருக்கும் கால்வாயில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வயதும் எட்டு மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குழந்தையின் சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்